மட்டக்களப்பு,பொலிஸ்நிலையத்துக்கு அருகில் குண்டு வெடிப்பு

OLYMPUS DIGITAL CAMERA         21.01.2009மட்டக்களப்பு,பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற கிளைமோர் குண்டு வெடிப்பில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.அத்துடன் ஒன்பது பேர் கயம் அடைந்து உள்ளனர்.இச்சம்பவம் இன்றுகாலை 07.30 மணியளவில் இடம் பெற்று உள்ளது.

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கும் இடையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சைகிள் ஒன்றில் இந்தக்கிளைமோர் பொருத்தப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவீத்தனர்.பொலிஸ் சார்யண்ட் பிரியந்த 39 வயது என்பவர் கொல்லப்பட்டு உள்ளார்.

சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்டநீதிமன்ற நீதிபதி வி.ராமகலன் விசாரனையை மேற்கொண்டார்.இதே வேளை இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் ஊடான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்தபகுதியில் அமைந்து இருந்த சுமார் 150 கடைகள் மூடப்பட்டு உள்ளன.

மூடப்பட்டு உள்ளன.

இந்தபிரதேசத்தில் இரனுவத்தினரும் பொலிசாரும் கூட்டுத்தேடுதலில் ஈடுபட்டு உள்ளனர்.

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009