தமிழீழ விடுதலைப் புலிகளுடன் வன்னியில் நடைபெற்று வரும் மோதல்களில் கொல்லப்பட்ட, காயமடைந்த சிறிலங்கா படையினரின் உறவினர்கள் பலர் கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு சென்று தமது பிள்ளைகள், கணவன்மார் குறித்து உடனடியாக தகவல் தருமாறு அழுது புலம்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வன்னியில் இதுவரை நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் அதிகமான படையினரின் உடலங்கள் எதுவும் உறவினர்களிடம் கையளிக்கப்படவில்லை எனவும் இதனால் சந்தேகம் கொண்ட மனைவிமாரும் பெற்றோரும் கொழும்பு இராணுவ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு விபரங்களை தருமாறு அழுத்தம் கொடுக்கின்றனர் என்றும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009