கியூ பிரிவின் முட்டாள் நினைவு

இலங்கையில் நடந்து வரும் உச்சக்கட்ட போரை தொடர்ந்து விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் தமிழக போலீசாரிடம் சரணடைய வாய்ப்புகள் உள்ளதாக கியூ பிரிவு போலீசார் எதிர்பார்க்கின்றனர்.இலங்கையில் ராணுவத்தினருக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடந்து வருகிறது. தற்போது ராணுவம் இலங்கையின் வடபகுதியில் முன்னேறி வருவதால் புலிகளின் கட்டுப் பாட்டில் 175 சதுர கி.மீ., பரப்பளவு மட்டுமே உள்ளது.

அப்பகுதியில் உள்ள தமிழர்கள் 14 ஆயிரம் பேர் கடந்த நான்கு தினங்களில் தப்பி பாதுகாப்பான இடத்துக்கு வந்துள்ளனர். புலிகள் பதுங்கியுள்ள பகுதியில் ராணுவத்தினர் பல்முனை தாக்குதல் நடத்தி வரும்நிலையில் பிரபாகரன், பொட்டுஅம்மன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நீர்மூழ்கி படகு மூலம் தப்ப திட்டமிட்டுஉள்ளனர். இலங்கை கடற்படையினர் சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் மூலம் கடல்பகுதியை தீவிரமாக கண்காணித்து வருவதால் இவர்கள் தப்பிசெல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ராணுவம் முன்னேறி வரும் நிலையில் பிரபாகரன் மற்றும் முக்கிய நபர்கள் கடல் வழியாக தமிழகத்துக்குள் தப்பி வரலாம் என கியூ பிரிவு போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கியூ பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "இலங்கையில் ராணுவம் புலிகளை நெருங்கிவிட்டநிலையில் பிரபாகரன் தப்பிசெல்வதை தவிர வேறு வழியில் லை. தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதால் கடலோர மாவட்டங்களில் 24 மணிநேர தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இலங்கை ராணுவத்தில் சரணடைவதைவிட தமிழக போலீசாரிடம் சரணடைவதேமேல்என்ற எண்ணத்தில் பிரபாகரன் தமிழகத்துக்குள் வரவாய்ப்பு உள்ளது ' என்றார்

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009