புலிகளின் அதிரடித்தாக்குதல்

800px-ltte_car_with_soldiers_in_killinochi_april_2004[1] 29_31_02_09_04[1] 29_31_02_09_01_76351_445[1] 29_31_02_09_03[1] ltte1[1] ltte3[1] ltte4[1] ltte[1] tank[1] 29_31_02_09_010[1] புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குதலில் இராணுவத்திடமிருந்து பெருமளவான ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதாக விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து விடுதலைப் புலிகள் நடாத்திய ஊடறுப்புத் தாக்குதலிலேயே இவ்வாயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரியவருகிறது.
இத்தாக்குதல் காரணமாக ஆயிரத்திற்கு மேற்பட்ட  இராணுவத்தினர் தமது பின்தள தொடர்புகளை இழந்துள்ளனர். அவர்களுக்கான விநியோகத்தைத் துண்டித்த விடுதவைப் புலிகள் பெருமெடுப்பிலான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

இராணுவத்தின்ர் புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகள் மீதான இறுதித் தாக்குதலை மேற்கொள்வதற்காக ஏற்பாடு செய்து குவித்து வைத்திருந்த இராணுவ தளபாடங்களே விடுதலைப்புலிகளின் கொமாண்டோ அணியால்  இத்தாக்குதலின் போது மீட்கப்பட்டுள்ளன.
20க்கு மேற்பட்ட மோட்டார்கள், ஆயிரத்திற்கு மேற்பட்ட செல்கள்., நூற்றுக்கணக்கான ரைபிள்கள், மற்றும் ஆர்.பி.ஜி, ஆர்.பி.ஜி மோட்டார்கள், ஏறத்தாழ மில்லியன் அளவிலான தோட்டாக்கள் என்பனவும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுள் அடங்கும்.
விடுதலைப் புலிகள் இந்த ஆயுதங்களை மீட்டுக் கொண்டிருந்த போது விமானப்படையினர் அவ்விடத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

அதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை கேப்பாபிளவு எனுமிடத்தில் விடுதலைப் புலிகளின் கரும் புலி அணியினர் மேற்கொண்ட தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து  வெளிவிரும் ஒரேயொரு நாளிதழான ஈழநாதம் தெரிவித்துள்ளது.
அப்பத்திரிகையில் கரும்புலி அணியியினருடன் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எடுத்திருந்த புகைப்படமும் வெளியாகியிருந்தது.
கரும்புலி அணியினர் வாகனங்களில் நிரப்பப்பட்ட வெடிகுண்டுகளுடன் சென்று தாக்குதல் நடாத்தியதில் ஏற்கனவே ஊடறுக்கப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த இராணுவத்தினருடைய நிலைகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டக்குள் வந்தன.

அதேவேளை  வவுனியாவிலுள்ள படைத்தரப்பு அதிகாரி ஒருவர் தமது படையினருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த போதும் தற்போது மீளவும் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அணியினரின் பல்வேறு அதிர்ச்சி தரக் கூடிய தாக்குதல்கள் இராணுவம் நிலைகொண்டுள்ள பகுதிகள் மீது மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா இராணுவத்தினரின் விநியோகத்திற்கெனப் பயன்படுத்தப்பட்ட ஏறத்தாழ 20 வாகனங்கள் இத்தாக்குதலின் போது அழிக்கப்பட்டுள்ளன. அத்தோடு விடுதலைப்புலிகள் இரணுவத்தினரின் கனரக ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதலுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் பெண்கள் அணியினர் எடுத்திருந்த புகைப்படங்களையும் விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை முல்லைத்தீவு சாலையில் தற்காப்பு யுத்தம் தொடர்வதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009