80 மில்லியன் ரூபா நிதி உதவி

மன்னார், வவுனியா மாவட்டங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலக் கண்ணி வெடி களை அகற்றுவதற்கான உடன்படிக்கை ஒன்றை ஜப்பானுடன் இலங்கை அரசு கைச் சாத்திட்டுள்ளது.
ஜப்பான் தூதரகத்தில் காலை நடை பெற்ற இந்த நிகழ்வில் ஜப்பான் தூதரகப் பொறுப்பதிகாரியான ஷிமேக்ஷி கண்ணி வெடிகளை அகற்றும் சுவிற்ஸர்லாந்து அமைப் பின் பிரதிநிதி மார்க்வெனே ஆகியோர் கலந்துகொண்டனர்.
உடன்படிக்கையின் பிரகாரம் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு ஜப்பான் இலங்கைக்கு 80  மில்லியன் ரூபா நிதி உதவி வழங்க இணங்கியுள்ளது.
கண்ணி வெடிகளை அகற்றி இடம் பெயர்ந்த மக்களை  அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதே இதன் பிரதான நோக்கம் என்று இலங்கை அரசாங் கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009