யாழ்குடாவுக்கு இன்று முதல் ஏ-9 வீதி ஊடாக உணவு

 

35 லொறிகள் வெலிசறை களஞ்சியசாலையிலிருந்து பயணம்
யாழ் குடாநாட்டு மக்களுக்கு தேவை யான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சுமார் 24 வருடங்களின் பின்னர் ஏ-9 வீதியூடாக இன்று கொண்டு செல்லப்படு கின்றன.
350 மெற்றிக் தொன் உணவுப் பொரு ட்களுடன் சுமார் 35 லொறிகள் கொழும்பு வெலிசறை களஞ்சியசாலையிலிருந்து இன்று காலை புறப்படுகின்றன.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரி னால் அனுப்பப்படும் பொருட்களும் உலக உணவுத் திட்டத்தினால் குடா நாட்டு மக்களுக்கு அனுப்பப்படும் அத்தியாவசிய பொருட்களும் மேற்படி லொறிகளில் கொண்டு செல்லப்படுகின்றன.
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெலிசறை களஞ்சிய சாலையில் உத்தி யோகபூர்வமாக இன்று உணவு லொறி களை வழியனுப்பி வைக்கவுள்ளார்.
உணவு பொருட்கள் ஏற்றிச் செல்வத ற்கென புதிதாக மேலும் 12 லொறிகளை மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவை கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பெற்றுக் கொடுத்துள்ளார்.
வெலிசறை களஞ்சியசாலையில் இரா ணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ் லொறிகளில் ஏற்றப்படும் பொருட்கள் யாழ். கைதடி நாவற்குழி யாழ். அரச அதி பரின் பொறுப்பிலுள்ள களஞ்சியசாலை க்கு கொண்டு சென்று அங்கிருந்தே பகிர்ந் தளிக்கப்படும் என அத்தியாவசிய சேவை கள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.
உணவுப் பொருட்களுடன் செல்லும் லொறிகள் அங்கிருந்து வரும்போது யாழ். மக்களின் உற்பத்திப் பொருட்களை கொழும்புக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வாரத்திற்கு 100 லொறிகள் வீதம் ஏ-9 பாதையூடாக ஆனுப்புவதற்கும் உத்தே சிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் நாட்க ளில் ஏ-9 பாதையூடாக தனியார் வர்த்த கர்களின் பொருட்களையும் கொண்டு செல்வதற்கான வசதிகளும் செய்துகொடு க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண மேலும் தெரிவித்தார்

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009