இலங்கை செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தாயார் மறுப்பு

jpUkiyapy; nghyprhhpd; Jg;ghf;fpr; #l;Lf;F ,yf;fhd re;Njf eghpd; rlyj;ij nghWg;Ngw;gjw;F mtuJ jha; kWg;Gj; njhptpj;jijaLj;J rlyk; mur nrytpy; ,d;W (16) mlf;fk; nra;ag;glTs;sJ.
%d;W Nfhb &gh fg;gk; Nfl;L flj;jg;gl;l rpWkpiaf; nfhiy nra;jhh;fnsd;w Fw;wr;rhl;by; ifJ nra;ag;gl;bUe;jth;fspy; xUth; nghyprhhpd; fOj;ij nehpj;J tpl;Lj; jg;gpr; nry;y Kad;wNghJ Rl;Lf; nfhy;yg;gl;lhh;.
kuz tprhuizfisaLj;J ,tuJ rlyk; jpUkiy itj;jparhiyapy; itf;fg;gl;bUe;jJ.
rlyj;ijg; nghWg;Ngw;FkhW ,tuJ jhahUf;F mwptpf;fg;gl;Lk; mjid mth; epuhfhpj;jijaLj;Nj ,d;W rlyk; mur nrytpy; mlf;fk; nra;ag;glTs;sJ.

Read On 0 கருத்துகள்

நாளாந்தம் ஐவர் உயிரிழக்கின்ற னர்

புதுமாத்தளன்

வைத்தியசாலையில் காயமடைந்த நிலையில் சேர்க்கப்படும் மக்களில்  நாளாந்தம் ஐவர் உயிரிழக்கின்ற னர் என அந்த வைத்தியசாலையின் வைத் திய அதிகாரி டாக்டர் பீ.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை பீரங்கித் தாக்குத லுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் 12 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட் டனர் என்றும் அவர்களுக்கு சிகிச்சைய ளிக்க மருந்துகள் இல்லை என்றும் அவர் கூறினார்.
இதேவேளை படுகாயமடைந்த நிலையில் புதுமாத்தளன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 400 பேர் நேற்றுமுன்தினம் மாலை "கிரீன் ஓஷன்" கப்பல் மூலமாக முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பீரங்கித் தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என டாக்டர் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தார்

Read On 0 கருத்துகள்

80 மில்லியன் ரூபா நிதி உதவி

மன்னார், வவுனியா மாவட்டங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலக் கண்ணி வெடி களை அகற்றுவதற்கான உடன்படிக்கை ஒன்றை ஜப்பானுடன் இலங்கை அரசு கைச் சாத்திட்டுள்ளது.
ஜப்பான் தூதரகத்தில் காலை நடை பெற்ற இந்த நிகழ்வில் ஜப்பான் தூதரகப் பொறுப்பதிகாரியான ஷிமேக்ஷி கண்ணி வெடிகளை அகற்றும் சுவிற்ஸர்லாந்து அமைப் பின் பிரதிநிதி மார்க்வெனே ஆகியோர் கலந்துகொண்டனர்.
உடன்படிக்கையின் பிரகாரம் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு ஜப்பான் இலங்கைக்கு 80  மில்லியன் ரூபா நிதி உதவி வழங்க இணங்கியுள்ளது.
கண்ணி வெடிகளை அகற்றி இடம் பெயர்ந்த மக்களை  அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதே இதன் பிரதான நோக்கம் என்று இலங்கை அரசாங் கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Read On 0 கருத்துகள்

இன்றைய ஊடறுப்புத்தாக்குதல்

 photo3[1]

 

photo2[1] copy  புதுக்குடியிருப்புப் பகுதிகளில் அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் மீது இன்று அதிகாலை முதல் விடுதலைப் புலிகள் ஊடுருவித் தாக்குதல் ஒன்றை நடத்திஉள்ளனர். இத்தாக்குதல் நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் விசேட படையணிகள் களம் இறக்கப்பட்டு உள்ளனர் இந்த ஊடறுப்புத்தாக்குதலில் 450இற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் பலநூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்து இருக்கலாம் எனவும் படைதரப்பு வட்டாரங்கள் தெரிவீக்கின்றன

Read On 0 கருத்துகள்

மாத்தறையில் தாக்குதல் மீலாத் விழாவில் சம்பவம்

 

10.03.2009 -செவ்வாய்க்கிழமை
மாத்தறையில்  இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் . இன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த தேசிய மீலாத் விழா வைபவத்திலேயெ இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

மீலாத் விழாவுக்கு வருகை தந்திருந்த கௌரவ விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டுக்கொண்டிருக்கையிலேயெ தற்கொலைதாரி சைக்கிளில் வந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் மாத்தறை அக்குரஸ்ஸ பகுதியிலுள்ள கோதாபிட்டி ஜூம்மா பள்ளி வாசலுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

jkpoPo tpLjiyg; Gypfs; elj;jpa ,e;jj; jw;nfhiyj; jhf;Fjypy; njtpe;ju gpuNjr rigj; jiyth; ypz;ld; mNgjPu> mf;Fw];] gpuNjr rigapd; cg jiyth; kw;Wk; mikr;rh; re;jpurpwp f[jPutpd; me;juq;fr; nrayhsh; jpyf; tPuNrfu MfpNahUk; nfhy;yg;gl;ldh;.

. அமைச்சர் மகிந்த விஜயசேகர கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்து வரப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சைகளை மேற்கொள்ள ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் வைத்திய தூதுகுழு ஒன்று அவசரமாக ஹெலிகொப்டர்கள் மூலம் மாத்தறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

Read On 0 கருத்துகள்

யாழ்.குடாநாட்டில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அகற்றும் பணி சிறிது காலத்தில் முடிவடைது விடுமாம்

யாழ்.குடாநாட்டில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகளை அகற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகக் கண்ணிவெடி அகற்றும் குழுக்கள் தெரிவித்துள்ளன.
மோதல்களின் போது யாழ்.குடாநாட்டில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை கடந்த காலத்தில் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கையில் இரண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு இதுவரை 46ஆயிரம் மிதிவெடிகள் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளன. இன்னும் சிறிய பரப்பளவில் மட்டும் தமது பணிகளை மேற்கொள்ளவேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read On 0 கருத்துகள்

சடலமாக மீட்கப்பட்டார்

இவரை இனம்காண உதவி கோரும் பாதுகாப்புத் தரப்பினர்.

கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்து கொண்டு செல்லப்பட்ட இவர் தற்போது சடலமாக கொழும்பு மரணபரிசோதனைகாரியாலயத்தில்வைக்கப்பட்டுள்ளது  இவரது பெயர் சின்னத்தம்பி பகலவன்

Read On 0 கருத்துகள்

பெண் ஒருவர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு டி1 காக்காச்சிவெட்டை வெல்லாவெளி பகுதியைச் சேர்ந்த இரு குழந்தைகளின் தாயான 30 வயதுடைய தம்பிப்பிள்ளை பேரின்பநாயகி என்னும் விதவைத் தாய் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இவரது கணவரும் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலை தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்ப பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Read On 0 கருத்துகள்

துப்பாக்கி சூடுகாவற்துறையினர் சிலர் உயிரிழந்தனர்

புத்தல‐ கதிர்காமம் வீதியில் கோனகன்ஹார பிரதேசத்தில் உள்ள காவற்துறை காவரண் மீது இன்று அதிகாலை விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் ஒரு குழுவினால் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு சிவில் பாதுகாப்பு படைச் சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதாக காவற்துறைப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது.

புத்தல‐ கதிர்காமம் வீதியின் கலகே காவலரண் மீது இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் காவற்துறையினர் சிலர் உயிரிழந்தனர். இதன் பின்னர் பாதுகாப்பு தரப்பினர் யால வனப்பகுதியில் தேடுதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Read On 0 கருத்துகள்

இரண்டு முட்டைகாக கைத்துப்பாக்கி

கிழக்கு மாகாணமுதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் [பிள்ளையானின்]சிரேஸ்ட ஆலோசகரான கலாநிதி காசிலிங்கம் விக்கினேஸ்வரனின் கைத்துப்பாக்கி களவாடப்பட்டுள்ளது.

அவர் கசிப்பு அருந்தும்பொழுது தொடுவதற்கு எதுவும் இல்லை என்பதால் கைத்துப்பாக்கியை கொடுத்து இரண்டு முட்டை அரைஅவியல்களை வாங்கியதாகவும் கேள்வி ஹிஹிஹிஹி

Read On 0 கருத்துகள்

அழுகிய நிலையில் சடலம்

வாழைச்சேனை காவத்தமுனை ஒட்டுவலி வயல் பிரதேசத்தில் இருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்றை வாழைச்சேனை பொலிசார் கண்டுபிடித்து உள்ளனர்.
தலையில் பலத்த காயத்துடன் காணப்படும் சடலத்திற்கு உரியவர் சுமார் 7 நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என வாழைச்சேனை பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வாழைச்சேனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள இந்த சடலத்தை வாழைச்சேனை நீதிபதி சென்று பார்வையிட்டுள்ளார்.
இதுவரை இந்த சடலம் அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது

Read On 0 கருத்துகள்

ஊழியர்களுக்குஇராணுவ பயிற்சி

சிறைச்சாலையில் சேவையாற்றும் புதிய ஊழியர்களுக்கு இராணுவ பயிற்சிகளை வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
கடந்த நாட்களில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவத்தை கவனத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக திணைக்களத்தின் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வஜிர விஜேகுணவர்த்தண தெரிவித்துள்ளார். நீதிமன்றங்களுக்கு கைதிகளை அழைத்துச் செல்லும் போது விஷேட பாதுகாப்புக்களை பொலிசாரிடம் இருந்தே தற்போது பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதால் இதனை தவிர்க்கும் முகமாக ஊழியர்களுக்கு ராணுவ பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Read On 0 கருத்துகள்

ஏ9 பாதையை எதிர்வரும் மார்ச் மாதமளவில்

மீட்கப்பட்ட ஏ9 பாதையை எதிர்வரும் மார்ச் மாதமளவில் மக்கள் போக்குவரத்துக்காகத் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரின் பொறியியலாளர்கள் பாதையைத் தற்போது புனரமைத்து வருவதாகவும் திருத்தப் பணிகள் நிறைவடைந்ததும் மக்கள் பாவனைக்காக பாதை உடனடியாகத் திறந்து வைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரதான பாதையான ஏ-9 யாழ்ப்பாணம் தொடக்கம் கண்டி வரை புனரமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Read On 0 கருத்துகள்

உடனடிப் போர் நிறுத்தத்திற்கும் அதனூடாக ஒரு நிரந்தர அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான

தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்கள் நாள் தோறும் எதிர்நோக்கும் இனஅழிப்பு பற்றி சர்வதேச சமூகத்தின் முன்னால் சில தகவல்களை முன்வைக்க விரும்புகிறோம்.

தமிழ் மக்கள் ஒரு தேசியமாகவே இலங்கை தீவினுள் வாழ்ந்து வருகிறார்கள். தொடர்ச்சியாகவே இத்தீவின் வடக்கு மற்கும் கிழக்குப் பகுதிகள் தமிழ் மக்களுடைய பாரம்பரியப் பிரதேசங்களாகவே இருந்து வருகின்றன. ஐம்பது வருடங்களுக்கு மேலாகவே இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அவர்களுடைய சுயநிர்ணய உரிமைக்கெதிராகவும் அவர்கள் ஒரு தேசம் என்பதற்கெதிராகவும் இந்த ஒடுக்குமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த அடிப்படையில் அவர்களுடைய நிலங்களைப் பறிக்க முயற்சி எடுத்ததோடு அவர்களுக்கெதிரான இனஒழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

தமிழ் மக்கள் மீது இத்தகைய கொடுரமான இன ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொண்டே அவர்களைத் தமது மக்கள் என்றும் சொல்லி வருகிறது. இது ஒரு அரச பயங்கரவாதம் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஐம்பது வருடங்களுக்கு மேலாக தமிழ் சமூகம் இதற்கெதிராகப் போராடி வருகிறது.

ஆரம்பத்தில் ஏறத்தாழ 25 வருடங்களாக அகிம்சை வழியில் சுயநிர்ணய உரிமையைப் பெறுவதற்கான போராட்டமாக இருந்தது. உலகம் முழுவதும் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இந்த அகிம்சை வழிப் போராட்டம் இலங்கை அரசாங்கத்தின் இளம் சிங்கள இளைஞர்களை மட்டுமே கொண்ட இராணுவத்தால் ஒடுக்கப்பட்டு பெருமளவான இரத்தம் சிந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

அதேவேளை போலிக்காரணங்களால் தூண்டிவிடப்பட்ட இனக்கலவரங்கள் காரணமாக தமிழ் மக்களுக்கெதிரான பல இனஒழிப்பு நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தின் துணையுடன் முன்னெடுக்கப்பட்டு வந்தன. தமிழ்மக்களுக்குச் சொந்தமான நிலங்களில் அரச ஆதரவுடன் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, கல்வி போன்ற துறைகளில் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டது.

சிங்கள தமிழ் இனமுரண்பாடு இவ்வாறான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை இன்னமும் கூர்மையாக்கின. இலங்கை அரசாங்கத்தின் வன்முறை காரணமாக தமிழ் மக்களுடைய அகிம்சை ரீதியான போராட்டம் பயனற்றதாகியது. இந்தப் புறக்காரணி தமிழ் மக்களின் போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக்கியது. இது தமிழீழ விடுதலைப் புலிகளின் வரவுக்கும் இந்த ஆயுதப் போராட்டத்திற்கு அவர்கள் தலைமை தாங்கவுமான சூழலை உருவாக்கியது.

தமிழ் மக்களே தமது அரசியல் இலக்கைத் தீர்மானித்தார்களே தவிர விடுதலைப் புலிகள் அல்ல. 1977இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது அரசியல் இலக்கு எதுவென்பதை முழுஉலகுக்கும் தெரியப்படுத்தினார்கள். இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அவர்களுடைய பாரம்பரியப் பிரதேசமான வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணத்தில் சுதந்திரமான ஒரு அரசை நிறுவுவது என தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒரு பொது முடிவுக்கு வந்தன.

தமிழ் மக்களுடைய ஜனநாயகரீதியான இம்முடிவை நிறைவேற்றுவதை தனது தேசியக்கடiமையாகக் கருதி அதனைக் கையிலெடுத்தது.

கடந்த 30 வருடங்களாக தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டம் அவர்களுடைய இராணுவ பலம் காரணமாக உலக அரங்கில் புகழ் பெற்றது. விடுதலைப் போராளிகளுடைய அதியற்புத அர்ப்பணிப்பு காரணமாகவே இது அடையப்பட்டது.

எப்போதெல்லாம் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக மேலோங்கிக் காணப்படுகிறார்களோ அப்போதெல்லாம் அரசியல் தீர்வு காணப் போவதாகச் சொல்லிக் கொண்டு சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறது. ஆனால் இந்தக் காலஇடைவெளியைப் பயன்படுத்தி தனது ஆயுதப்படைகளை மீண்டும் பலப்படுத்திக் கொண்டு சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இடையூறு விளைவித்து போருக்கான சூழலை உருவாக்கி வந்திருக்கிறது.

ஆயுதப் போராட்டம் உருவாகியதன் பின்னர் முதல் முதல் 1985இல் இடம்பெற்ற திம்புப் பேச்சுவார்த்தைகளிலிருந்து நோர்வேயின் அநுசரணையுடன் 2002ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு ஐந்து ஆண்டுகளாக நீடித்த சமாதான ஒப்பந்தம் வரை உலகை ஏமாற்றும் வகையில் இலங்கை அரசு இந்த நாடகத்தை அரங்கேற்றியது.

இணைத்தலைமை நாடுகளின் ஆதரவுடனும் நோர்வேயின் அனுசரணையுடனும் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே மூன்று முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தன. 2002 போர் நிறுத்த உடன்படிக்கை, சுனாமிக்குப் பின்னரான நிர்வாகக்கட்டமைப்பு, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான வடகிழக்குக்கான உடனடியான மனிதாபிமான மற்றும் புனர்வாழ்வு செயலகம் ஆகிய மூன்று உடன்படிக்கைகளையும் இலங்கை அரசு நிராகரித்து விட்டது.

பேச்சுவார்த்தைகளுடாக அரசியல் தீர்வைக்காணுமாறும் இராணுவ வழியில் தீர்வைக் காண முற்பட வேண்டாம் என்றும் சர்வதேச சமூகம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததை இலங்கை அரசு புறக்கணித்துவிட்டது என்பதை உலகம் அறியும்.

சிங்கள தமிழ் இன முரண்பாட்டில் இலங்கை அரசின் நிலைப்பாட்டினை விடுதலைப் புலிகளைத் தவிர வேறெவரும்; சரியாக இனம்காணவில்லை. இனப்பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் ஒரு போதும் அரசியல் தீர்வு காணப் போவதில்லை. அது இராணுவ ரீதியில் தீர்வு காணவே முயற்சிக்கிறது என்று விடுதலைப் புலிகள் நீண்ட காலமாகவே சொல்லி வந்திருக்கிறார்கள். அரசியல் தீர்வு காண்பதற்குப் பதிலாக தனது இராணுவத் தீர்வை வலியுறுத்தும் வகையில் இதனை சர்வதேச சமூகத்தின் முன் பயங்கரவாதத்திற்கெதிரான போராகச் சித்திரித்து வருகிறது.

இலங்கை அரசாங்கம் செய்யும் கொடுரங்களை அது அரசு எனும் ஸ்தானத்தில் இருப்பதன் காரணமாக சகித்துக் கொள்வதையும் விடுதலைப் புலிகள் அரசு என்ற ஸ்தானத்தைப் பெறாததால் அவர்களை நிராகரிப்பதையும் உலக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஹிட்லரின் அரசாங்கத்திலிருந்து ருவாண்டா, சூடான் அரசாங்கங்கள் வரை இவை எல்லாமே அரசாங்கங்களாக இருந்து கொண்டு இனப்படுகொலையை மேற்கொண்டவை. இலங்கை அரசாங்கமும் தமிழர்கள் மீது பல இனப் படுகொலைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இந்த இனப்படுகொலை வரலாறு 1956இல் ஆரம்பித்து இன்று வரை நீள்கிறது. 1956இலிருந்து இந்த இனப்படுகொலை வரலாற்றில் இரண்டு இலட்சம் பேர் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையாகவுள்ள தனியரசை ஆதரிப்பதில் தயக்கம் காட்டி வருகின்றன. எங்களுடைய அபிப்பிராயத்தில் இந்த தமிழ் சிங்கள முரண்பாட்டிற்கு உள்ள ஒரேயோரு நிரந்தரத் தீர்வு அதுவாகத் தானிருக்கிறது. சிங்கள அரசாலும், சிங்கள ஆயுதப்படைகளாலும் நீண்டகாலமாகவே தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த படுகொலைகளால் சோர்வுக்கும் அழுத்தத்தி;ற்கும் ஆளாகியுள்ளனர்.

அவர்களுடைய மிகப்பெருமளவிலான இழப்புக்களும், அவர்களுடைய சொல்லப்படாத துயரங்களும் வேட்டையாடப்பட்ட நினைவுகளும் ஒன்றாக வாழலாம் என்கிற நம்பிக்கையைச் சிதைத்து விட்டன.

இது தான் இலங்கையின் இனத்துவ அரசியல் யதார்த்தம். இப்போது வன்னி மீது மேற்கொள்ளப்படும் கொடுமையான நடவடிக்கைகள் இந்த யதார்த்தத்தை கெட்டிப்படுத்தியுள்ளன.

யுத்தத்தில் ஒருவர் மீது மற்றவர் பாவிக்கும் ஆட்லறி மற்றும் பல்குழல் பீரங்கிகள் வன்னி யுத்தத்தில் இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்கள் மீதும் அவர்களுடைய முகாம்கள் மீதும் பாவிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் சிறுவர்கள் முதியோர்கள் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் அவயவங்களை இழந்தும் காயப்பட்டும் உள்ளனர்.

கடந்த சில வாரங்களில் நாளாந்தம் 50 தொடக்கம் 100 வரையான சாதாரண மக்கள் இவ்வாறான தாக்குதல்களால் கொல்லப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே இரண்டாயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 5000 பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறான மனித அவலம் குறித்து உலகம் தொடர்ந்து மௌனம் சாதிப்பது வருத்தம் தருகிறது.
21ஆம் நூற்றாண்டில் தமிழீழ தமிழ் மக்கள் வெறுத்தொதுக்கத்தக்க இனப்படுகொலையை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் மனித அவலத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நன்நோக்கோடு சர்வதேச சமூகத்தால் கொண்டு வரப்படும் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறது.

இந்தப் போர் நிறுத்தம் பேச்சுவார்த்தையூடான ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கு இட்டுச் செல்வதாக அமைய வேண்டும் என்பதே விடுதலைப் புலிகளின் அவாவாகும்.

விடுதலைப் புலிகளை ஆயுதங்களைக் கீழேபோடச் சொல்வதும் சரணடையுமாறு கோருவதும் இனப்பிரச்சினையைத்; தீர்க்க உதவப் போவதில்லை என்பதை உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விடுதலைப்புலிகளிடமுள்ள ஆயுதங்கள் தான் தமிழ் மக்களைப் பாதுகாப்தோடு அவர்களுடைய அரசியல் விடுதலைக்கான கருவியாக உள்ளது என்பதும் இன்றைய அரசியல் யதார்த்தம்.
விடுதலைப் புலிகள் பல பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியுள்ளார்கள். அப்போதெல்லாம் எவரும் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று சொன்னதில்லை.

விடுதலைப்புலிகளிடமுள்ள ஆயுதம் தான் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பு. சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் உறுதிப்பாட்டுடனும் தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தரத்தீர்வு எட்டப்படுமிடத்து விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் அவசியப்படாத ஒரு சூழல் உருவாகும்.

தமிழ் மக்கள் இனப்படுகொலையை எதிர்நோக்கியிருக்கும் தருணத்தில் அரசியல் தீர்வொன்றைக்காண முயற்சிக்காத ஒரு நிலையில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என எதிர்பார்ப்பது இந்த நூற்றாண்டில் சுதந்திரத்திற்கான ஒரு போராட்டத்தை நிந்தனை செய்வதாகும். அதேவேளை இலங்கை அரசாங்கத்தையும் அதன் இனப்படுகொலை யுத்தத்தையும் ஊக்கப்படுத்துவதுமாகும்.

ஆகவே, விடுதலைப் புலிகளை ஆயுதங்களைக் கீழேபோடுமாறு வற்புறுத்துவதை விட்டு விட்டு தமிழ் மக்களுக்கெதிரான இனப்படுகொலையை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

வன்னியலுள்ள தமிழ் மக்கள் பாதுகாக்கப்படுவதோடு அவர்களுக்கான உணவு மற்றும் மருத்தவ தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். சர்வதேச சமூகம் போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதோடு இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

உடனடிப் போர் நிறுத்தத்திற்கும் அதனூடாக ஒரு நிரந்தர அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான எல்லா முயற்சிகளையும் முன்னெடுக்கவும் அதற்காகக் கலந்துரையாடவும் இணைந்து செயற்படவும் தயாராக உள்ளோம் எனச் சர்வதேச சமூகத்திற்கு நாங்கள் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
உண்மையுள்ள
பி.நடேசன்
அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழீழ விடுதலைப் புலிகள்

Read On 0 கருத்துகள்

கொழும்பில் விடுதலைபுலிகள் விமானத்தாக்குதல்

[plane3.jpg]Air-strike[1]

[plane5.jpg][plane6.jpg]5 படையினர் கொல்லப்பட்டு உள்ளனர்

கொழும்பில் இன்று இரவு வான் பாதுகாப்புப் பொறிமுறை இயக்கப்பட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புக்கு அச்சம் ஏற்படும் வகையில் வெளியான தகவலை அடுத்து கொழும்பு பெரும்பாகத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டதுடன் வான் பாதுகாப்பு பொறிமுறையும் செயற்பட்டதனை அடுத்து பதட்டம் நிலவியதாக தெரிவிக்கப்பட்டிருடுகிறது.
கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் அனைத்து இடங்களிலும் வானை நோக்கி கடுமையான வான் தாக்குதல்களை படையினர் ஆகாயத்தை நோக்கி மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.இதனைல் கொழும்பில் பாரிய பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இன்று இரவு வன்னியில் இருந்து புத்தளம் கற்பிட்டி பக்கமாக கொழும்பு நோக்கி வந்ததாக சந்தேகிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று வெள்ளிக்கிழமை இரவு 9:30 மணியளவில் இத்தாக்குதலை நடத்தியுள்ளது.
2 தாக்குதல் விமானங்கள் கொழும்பின் மத்தியில் அதி உயர் பாதுகாப்பு வலையப் பகுதியில் 2 குண்டுகளை வீசிச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில் ஒன்று உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகத்திற்கு அண்மித்தும் மற்றையது பிறிதொரு பகுதியிலும் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பிந்திக் கிடைத்த தகவல்களின்படி ஆனைமடுவப் பகுதியில் 3 குண்டுகளும், வத்தளை அல்லது விமான நிலையப் பகுதியில் ஒரு குண்டும் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
எனினும் கொழும்பு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அண்மையில் வீழ்ந்த குண்டினால் 42 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காயமடைந்தவர்கள் அனைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எத்தனைபேர் பொதுமக்கள் என்பது குறித்த தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
காயமடைந்தவர்கள் பொதுமக்கள் என அரச தரப்பு செய்திகள் தெரிவித்த போதிலும் தாக்குதல் நடந்த நேரத்தில் இறைவரித்திணைக்களகத்தில் அந்தளவு பொதுமக்கள் இருந்திருக்கமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் தாக்குதல் நடத்தப்பட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்கள கட்டடம் சேதத்திற்கு உள்ளாகி உள்ளதுடன் இந்தப் பகுதியிலேயே வான்படையின் தலமையகம், லேக்கவுஸ் பழ்pரசகைல் காரியாலையம், ஐநாவின் பிரதி செயலாளர் நாயகம் கோம்ஸ் தங்கியுள்ள ஹில்ட்டன் 5 நட்சத்திர விடுதி உள்ளிட்ட பிரபல விடுதிகள், பளைய நாடாளுமன்றம் முதலான முக்கிய கட்டடங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புதக்குடியிருப்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடுமையான சத்தங்கள் கேட்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிர்வுகள் தென்மராட்சியை அண்மித்தும் யாழ் கரையோரப் பகுதிகளை அண்மித்தும் கேட்பதாக கூறப்படுகிறது

Read On 0 கருத்துகள்

சுட்டுக்கொலை செய்யப்பட்டார்

கிழக்குமாகண முதலமைச்சர் சிவனேசன் சந்திரகாந்தன் ஆன பிள்ளையானின் இணைப்புச்செயலர் சீலனின் மெய்பாதுகாவலரன சிவனேசன் கருணகுழுவினரால் இன்று மட்டக்களப்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் கருணாவிற்கும் பிள்ளையானுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டபின்பு கருணாகுழுவினர் பிள்ளையானின் உறுப்பினர்களை சுட்டுக்கொல்வது அண்மையில் நடை பெற்று வருகிறது

Read On 0 கருத்துகள்

ரத்ததான முகாம்

வன்னியில் காயம் அடையும் படைச்சிப்பாய்களுக்கான பாரிய ரத்ததான முகாம் இன்று காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் ஆரம்பிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.  காத்தான்குடியில் இடம்பெற்ற இந்த ரத்த தான முகாமில் மாவட்ட ராணுவ மேயர் தென்னக்கோன் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் பிரேமரட்ன மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.  சுமார் 100 பேர் ரத்தானம் வழங்கினர். இங்கு சேகரிக்கப்பட்ட ரத்தம் வன்னிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை கொண்டு படையினர் உயிரை காப்பாற்றுவதற்கு முயற்சி ஹிஹிஹிஹி

Read On 0 கருத்துகள்

பிரபாகரன் கோழைத்தனமானவரல்ல

படையினரால் கைதுசெய்யப்படுமளவிற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கோழைத்தனமானவரல்லவென கிழக்கு மாகண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிள்ளையான் தெரிவிப்பு.
வன்னி நிலவரம் தொடர்பாக ஊடகவியளாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் தெரிவித்தார்.
வன்னி களநிலமை தற்போது பெரும் இறுக்கமானதொரு நிலையினை அடைநதிருக்கிறது எனவும் இலங்கை இராணுவம் பலதரப்பட்ட வெற்றிகளை பெற்றிருக்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Read On 0 கருத்துகள்

தொப்பிக்கலையில் புலிகள் தாக்குதல்

மட்டக்களப்பு தொப்பிக்கலை பிரதேசத்தில் தமிழீழ விடுதலைபுலிகள் அரசபடையினர் மேல் நடத்திய தாக்குதலில் நேற்று இரவு இருபடையினர் கொல்லப்பட்டனர்

வழமையான ரோந்துப்பணிகளில் ஈடுபட்டிருந்த படையினரை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டது

Read On 0 கருத்துகள்

சிவிலியன்கள் மீது ஒட்டுக்குழுவினர் கைக்குண்டு வீச்சு

SRI LANKA-UNREST-ATTACK அதிகாலை 1.30மணியளவில் பொதுமக்களை ஏற்றி கொண்டு புளியங்குளம் வவுனியப்பிரதேச வீதியில்வந்துகொண்டிருந்த பஸ் வண்டியினை இலக்கு வைத்து ஒட்டுக்குழுவினர் நடத்திய தாக்குதலில் வயதான 5 ஆண்கள் இருசிறுவர்கள் வயதான 5பெண்கள் இருபெண்கள் ஆகியோர் காயம் அடைந்து உள்ளனர்

கைக்குண்டுத்தாக்குத்லில் பயம் அடைந்த ராணுவச்சிப்பாய் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் மரணம் அடைந்து விட்டார்

காயம் அடைந்த அனைவரும் மரணமடைந்தவரின் சடலமும் வவுனியா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளது

Read On 0 கருத்துகள்
 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009