சீனாவிடம் இருந்து 160டாங்கிகள் இலங்கைக்கு

2105Army%20Vehical[1] விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட யுத்தம் என அரசாங்கம் தெரிவித்து முல்லைத்தீவை நோக்கிய நகர்விற்கு சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடம் இருந்து நவீன கனரக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது

முல்லைத்தீவை நோக்கிய நகர்வில் எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக் கருதிய இதன் முதல் கட்டமாக இலங்கை அரசு சீனாவிடமிருந்து   நவீன 160 டாங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளது.

படையினரின் முன்னோக்கிய நகர்வில் மழை, வெள்ளம், சகதி மற்றும் காடு சார்ந்த சூழலை எதிர் கொள்ளக் கூடிய அதி நவீன டாங்கிகள் சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை ஏற்றிய கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் தரித்து நிற்பதாகவும் தென்னாசிய பிராந்திய தகவல் ஒன்று கூறுகிறது

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ பாகிஸ்தான் சென்ற நிலையில் மறுபுறம் சீன அரசிடமும் ஆயுத உதவிகள் கோரப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009