சிம்மம் ராசிக்காரரது

இவர்களது உள்ளங்கை சிறியதாக இருக்கும். விரல்கள் சீராக இருக்கும். கைகளில் மச்சம் இருக்கும். நெற்றி பெரியதாக இருக்கும். கழுத்து, வயிறு, காலில் மச்சம் இருக்கும். இவர்களது உடலில் தழும்புகள் குறைவாகவே இருக்கும்.சிம்ம ராசிக்காரர்கள் எந்த காரியத்தை செய்தாலும் அதில் வெற்றி அடைவது நிச்சயம். கனிமம் மற்றும் கல் தொடர்பான வேலைகளில் இவர்கள் லாபம் அடையலாம். தனது விருப்பத்தையும், தொழிலையும் தனித்தனியாக வைத்திருப்பர். விளையாட்டு இவர்களுக்கு பிடிக்கும். இவர்கள் வழக்கறிஞராக இருந்தால் சிறப்பாக இருக்கும்.

சிம்ம ராசிக்காரர்களின் பணப்புழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். எப்போது தேவைப்பட்டாலும் இவர்களுக்கு பணம் கிடைத்துவிடும். இவர்கள் பணத்தை செலவழிக்க பயப்படுவர். செலவு ஏற்பட்டாலும் அதை நினைத்து கவலை கொள்வர். பண வரவு இவர்களுக்கு இருந்தாலும், அதற்கேற்ப செலவும் இருக்கும். பணத்தை சேமிப்பது இவர்களுக்கு எளிதானதல்ல. இவர்கள் வீட்டில் திருடு போகவும், பொருள் காணாமல் போகவும் வாய்ப்பு உண்டு. பொருட்களை மறந்து வைத்துவிடவும் வாய்ப்புண்டு. இவர்கள் வீட்டில் ஏதேனும் மிருகமோ அல்லது பறவையோ வளர்ப்பது நல்லது.

சிம்ம ராசிக்காரர்கள் நல்ல குணவான்களாக இருப்பர். ஒற்றுமை உணர்வு, சக்தியை வெளிப்படுத்துதல், மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கு கொண்டவர். எல்லோரையும் சந்தோஷமாக வைத்திருத்தல், முக தாட்சண்யம் காட்டுதல், உறவினர்கள் மீது அதிக அன்பு காட்டுபவர். சாஸ்திர சம்பிரதாயங்களை மதிப்பவர், எப்போதும் எதிர்கால சிந்தனையுடன் வாழ்பவர், பல லட்சியங்களை வகுத்து அதன்படி வாழ்பவர், மற்றவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை அளிப்பவர், பல நண்பர்களை கொண்டவர், எப்போதும் கம்பீரமாகக் காணப்படுபவராக சிம்ம ராசிக்காரர் விளங்குவார்.

சிம்ம ராசிக்காரர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் அதிக வெற்றி பெறுவர். இவர்களது புகழ், செல்வாக்கு ஆகியவை பிறந்த நேரத்தை வைத்தே கணக்கிட இயலும். சினிமா, பத்திரிக்கை, அரசியல் போன்றவற்றில் சிறப்பிடம் பிடிக்க இயலும்

சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.

மேஷம், கடகம், மிதுனம், விருட்சிகம், கன்னி, தனசு, மீனம் ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும். கூட்டணியும் சிறப்பாக இருக்கும். துலாம், மகரம், கும்ப ராசிக்காரர்களுடன் ஒத்துப்போவர். ரிஷப ராசிக்காரர்களுடன் ஒத்துப்போகாது. சிம்ம ராசிக்காரர்கள் மற்ற சிம்ம ராசிக்காரர்களுடன் எளிதாக ஒத்துப்போவர். இவர்களுக்கு இடையேயான நட்பு நீடிக்கும். கும்ப ராசிக்காரர்களுடன் திருமணம் செய்து கொள்ளலாம். விருட்சிக ராசிக்காரர்களுடன் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆத்மார்த்தமான உறவு ஏற்படும். இவர்கள் மிகச் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். நண்பர்களிலேயே சிம்ம ராசிக்காரர்கள் நாயகர்களாக திகழ்வர். நண்பர்களுக்காக எதையும் செய்வர். அவர்களுக்காக எதையும் சகித்துக் கொள்வர்.

சினிமா, பொருட்களை வாங்குதல், அழகான துணிகள், ருசியான உணவு, ஆலோசனை கேட்டல், விஞ்ஞான விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். நகை வடிவமைத்தல், விளையாட்டுக்களிலும் ஆர்வம் இருக்கும். சிற்பகலை, ஓவியம், ஆடை வடிவமைப்பு, தபால் தலை சேகரித்தல் போன்றவற்றிலும் இறங்குவர்.சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள். மற்றவர்களிடம் அன்பு காட்டுவர். இவர்கள் சிறந்த கணவராக இருப்பார். இவர்களது மண வாழ்க்கை சிறப்பாக அமைந்தாலும், அடிக்கடி கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவும். திருமண தோஷம் இருக்க வாய்ப்புண்டு. சிம்ம ராசிக்காரர்கள் பழகுவதற்கு கடினமானவர்கள். எளிதில் கோபம் வந்துவிடும். கோபம் வந்தால் எந்த எல்லைக்கும் செல்வார்கள். பிரியமானவர்களிடம் அதிகம் கோபப்படுவர். கோபத்தை குறைத்தால் மண வாழ்க்கை சிறப்பாக அமையும்.

சிம்ம ராசி ஆண்கள் எந்த கஷ்டத்தையும் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வர். எதிர்காலத்தை நினைத்து அதிகம் கவலை கொள்வர். சூரியனின் பார்வை இருப்பதால் இவர்களுக்கு அதிகம் கோபம் வரும். பிடிவாதம், பேராசை இவர்களது கெட்ட குணங்களாகும். உபாயம் புதன்கிழமையில் விரதம் இருத்தல் நலம்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு மாணிக்கம் அதிர்ஷ்ட கல் ஆகும். திங்கள் கிழமையன்று தங்கத்தில் மாணிக்கம் பதித்த மோதிரத்தை அணியவும்.

சிம்ம ராசிக்காரர்கள் பணத்தை சிக்கனமாக செலவிடுபவர்கள். பணத்தை சேமிக்கும் ஆற்றல் மிக்கவர். எல்லோருக்கும் மதிப்பளிப்பவர். சிம்ம ராசிக்காரர்கள் தங்களை மட்டும் உற்சாகமாக வைத்துக் கொள்ளாமல், தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் உற்சாகப்படுத்துவர், தன்னம்பிக்கை ஊட்டுவர். ஒற்றுமையை அதிகம் விரும்புவார். சுதந்திரம், சுயமரியாதை, லட்சியம் என வாழ்க்கையை உபயோகமாக செலவழிக்க விரும்புவர். உடன் இருப்பவர்களை எப்போதும் சந்தோஷமாக வைத்திருப்பர். மனதின் மகிழ்ச்சி உள்ளேதான் உள்ளது. வெளியில் இல்லை என்பதை நம்புவார். கையில் பணம் இருந்தால் மகிழ்ச்சியாகவும், பணம் இல்லை என்றால் கவலையாகவும் இருப்பர். மற்றவர்களை எளிதில் கவருவர்.

எதைப் படித்தாலும் அதில் முதல் மாணவராக சிம்ம ராசிக்காரர் திகழ்வார். ஒரு சிலரது படிப்பு, அவர்களது ஜாதக அமைப்புப்படி மாறும். மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம், இதய நோய் நிபுணர், இலக்கியம், பத்திரிக்கை, அரசியல், ஜோதிடம் போன்ற கல்விகளை கற்கலாம்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியக் குறைவு இருந்தாலும், பணியாற்றுவதில் இவர்களுக்கு நிகரானவர்கள் இல்லை. கழுத்து, வயிறு, கண் தொடர்பான குறைபாடுகள் ஏற்படும். தோல் நோய், ரத்த சோகை, காது வலி, வாதம், காய்ச்சல் ஏற்படலாம். விரைவில் குணமடைவர். சிறாராக இருக்கும் போது அதிக நோய்த்தாக்குதல் ஏற்படும். இளமையில் ஆரோக்கியமாக இருப்பர். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். உருளை கிழங்கு, பருப்பு, தக்காளி, மாம்பழம் இவைகள் மிகவும் பிடித்தமானது.

சிம்ம ராசிக்காரர் தனது தாயின் மீது அளவுக்கதிகமான அன்பு செலுத்துவார். சிவனை வழிபடும் இவரது அனைத்து சுக-துக்கமும் நொடிப்பொழுதில் முடியும். குடும்பத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்வர். ஆனால் இவர்களுக்கு தங்களது சகோதர, சகோதரிகள் மீது அக்கறை இருக்காது. மூத்தவர் ஒருவரின் மரணத்தினால் அவரது சொத்துக்கள் இவரை அடையும் வாய்ப்பு உள்ளது. பயணத்தின்போது விபத்து நேரிடும் வாய்ப்பு உள்ளது. சிம்ம ராசிக்காரரின் தந்தை விபத்தில் சிக்கும் வாய்ப்பும் உள்ளது. சிம்ம ராசிக்காரர்கள் தனது தந்தையுடன் விரோதத்தை கடைபிடிப்பர்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் பார்வை இருப்பதால் இவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிர்ஷ்டமாகும். புதன்கிழமை சுபம். செவ்வாய்க்கிழமை அசுபம். சனிக்கிழமை பரவாயில்லை.

சிம்ம ராசிக்கு 1 மற்றும் 4 அதிர்ஷ்ட எண்களாகும். 1ன் கூட்டு எண்களும், 4ன் கூட்டு எண்களும்கூட அதிர்ஷ்டமாகும்

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009