யாழ்.பல்கலைக்கழகத்தைச் சுற்றி நேற்று சோதனை நடவடிக்கை

யாழ்.பல்கலைக்கழகத்தைச் சுற்றி நேற்றுக் காலை முதல் படையினரும் பொலி ஸாரும் பெரும் எண்ணிக்கையில் அந்தப் பகுதியில் காணப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது.
பல்கலைக்கழகத்தில் சொதனை நடத்து வதற்காக நீதிமன்றத்தின் அனுமதி பெறப் பட்டுள்ளது என்றும் முற்பகல் 10 மணி முதல் மாலை 6 மணிவரை இந்த நடவ டிக்கை இடம்பெறவுள்ளது என்றும் தெரிவித்து பொலிஸ் குழு ஒன்று பல்கலைக் கழகத்துக்கு வருகை தந்து நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டதாக  அறியப்பட்டது.
இது  குறித்து  மேலும் அறியவந்ததாவது:
சொதனை நடவடிக்கை இடம்பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து பொலிஸாருக்கும் நீதிமன்றத்துக்கும் பல்கலைக் கழக நிர்வாகம் எடுத்துக்கூறியது.
இது தொடர்பாக நீதித்துறை, பல்கலைக்கழக, பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்ட சந்திப்பு ஒன்று பல்கலைக்கழகத்தில் நண்பகல் நடைபெற்றது.
சந்திப்பின் போது ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட சில முடிவுகளை அடுத்து மாலை 5 மணிமுதல் 6.30 மணிவரை பல்கலைக் கழக மாணவர்கள் தங்கியிருக்கும் ஆனந் தக்குமாரசாமி விடுதியில் பொலிஸார் தேடுதல் நடத்த இணக்கம் காணப்பட்டது. இதன்பிரகாரம் மாலை 5 மணி முதல் விடுதியில் தேடுதல் இடம்பெற்றது.
பல்கலைக்கழக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளின் பிரசன்னத்தில் இடம்பெற்ற இந்தத் தேடுதலில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தேடுதல் சுமுக மாக நடைபெற்றது என்றும் தெரிவிக்கப் பட்டது.
நேற்றுக்காலை முதல் மாலை வரை பல் கலைக்கழக சூழலில் படையினர் குவிக்கப்பட்டு, வீதியில் சென்றோரும் பல்கலைக் கழகத்துக்கு வந்தோரும் விசாரணை செய் யப்பட்டனர். அதனால் அப்பகுதியில் பதற்றநிலை நிலவியது.

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009