ராகு கேதுவைப்பற்றி

ராகு கேதுவின் நிழலைக்கண்டு நிஜகிரகங்களும் ராஜகிரகங்களன குரு சனி போன்ற கிரகங்கள்கூட அஞ்சுவது உண்டு.ஒரு மனிதனின் வழ்க்கையை அப்படியே தலைகீழாக மாற்றும் சக்தி கொண்டது இந்த இரண்டு கிரகங்களும் தானுங்க.ஒருவரது வசதிக்கும் வறுமைக்கும் காரணமாக விளங்குபவர்கள்.

மேஷம்,ரிஷபம்,கடகம்,கன்னி,மகரம் ஆகிய 5வீடுகளில் ராகு அமர்ந்து இருந்து ராகுதிசை வந்தால் எல்லா வித ராஜா யோகங்களையும் அனுபவிப்பார் என்று சந்திரகாவியம் என்னும் நூலில் கூறப்பட்டு உள்ளதுங்க

ரிஷபம்,மிதுனம்,கன்னி,துலாம்,மகரம்,கும்பம் ஆகியவற்றில் பிறந்து சுக்கிரனி நட்சத்திரங்களான பரணி,பூரம்,பூரடம் ஆகிய நட்சதிரதில் எதவது ஒன்றில் ராகு அமர்ந்து ராகுதிசை நடந்தால் அவர் தொழில் அதிபராகவும்,மேதையாகவும் காணப்படுவாருங்க எண்டு வீமேசுரம் எண்ட நூல் கூறுகிறது..

சுக்கிரன் ரிஷபம்,துலாகம்,மீனம் ஆகிய வற்றில் ராகு அமர்ந்திருக்கும் போது ராகு திசை வந்தால் நாட்டினை ஆழும் யோகம் கிடைக்கும் என்று யாதகாபரணம் என்னும் நூல் கூறுதுங்க

குருவுடன் ராகுவும் சேர்ந்து கடகம்,விருட்சிகம்,மீனம் ஆகியவீடுகளில் அமரும்போது ராகுதிசை வந்தால் சட்ட நிபுணராக வருவங்க                 

               விஞ்ஞானம்,மெஞ்ஞானம்,மருத்துவம்,யோகா,தியானம்,தேசப்பற்று ஆகியவற்றை வாரிவழங்குபவர் கேது பகவான் ஆகுமுங்க அரசனுக்கும் ஆண்டிக்கும் பாகுபாடு இல்லாமல் ஒரே அளவு பலன் கொடுபவர்.பலம் இல்லாத வனுக்குக்கூட கேதுவின் பார்வை பட்டால் வீரன் ஆவான்.

ஒருவனை படை பலமும் பணபலமும் கொடுக்கும் சக்தி நம்ம கேதுவிக்கு உண்டு

              ராகு கேது இருவரின் அருளை பெற இந்த மந்திரத்தை தினமும் உச்சரியுங்க சரியா                               

                ….. ராகு பகவன்……

          ஓம் நாக த்வ்ஜாய வித்ம்ஹே

               பத்ம ஹஸ்தாய தீமஹி

              தந்நோ ராகு ப்ரசோதயாத்

           …………கேது பகவன்……

        ஓம் அஸ்வ த்வஜாய வித்ம்ஹே

            சூல ஹஸ்தாய தீமஹி

      தந்நோ கேது ப்ரசோதயாத்

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009