புலிகளால் வீழ்த்தப்பட்ட விமானம்

09_019 09_020 இலங்கை வான்படையினருக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டுவீழ்த்தப்படிருக்கிறது.

இவ்விமானம் வானில் வெடித்துச்சிதறுவதை பலபொதுமக்கள் கண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு அணியினர் இதனைச் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் விடுதலைப்புலிகள் இதுதொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவித செய்திகளையும் வெளியிடவில்லை.
முன்னதாக சிறீலங்கா வான்படையின் விமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் ராடரைவிட்டு மறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது
வன்னி வான்பரப்பில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடாத்த சென்ற போது காணமல் போயுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட செய்தி வெளிவந்துள்ளது.
இதேநேரம் தேவிபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் சிறீலங்காப் படையினருக்கும் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றது இதில் 1200 படையினர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் பல்லாயிரக்கணக்கான படையினர்வரை காயம் அடைந்து உள்ளதாகவும் வன்னி தகவல்கள் கூறுகின்றன

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009